போலி சான்றிதழ் மோசடி: வாலிபர் கைது
நெல்லை: பிறப்பு, இறப்பு, வருமானம் போன்ற அரசு சான்றிதழ்களை போலியாக தயாரித்து மோசடி செய்து வந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வடநத்தம்பட்டியை சேர்ந்த முத்தையா மகன் முருகையா. இவர் தனக்கு வழங்கப்பட்ட வருமான மற்றும் சாதி சான்றிதழ்களில் அரசு முத்திரை இல்லை என்று விஏஓ மாரியப்பனிடம் புகார் கூறினார். மேலும் அந்த சான்றிதழ்களி்ல் அரசு முத்திரை பெற்று தருமாறு கோரினார்.
அவர் கொடுத்த சான்றிதழை வாங்கி சரிபார்த்த பார்த்த விஏஓ மாரியப்பன், அதில் தனது கையெழுத்து இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அந்த சான்றிதழை யாரிடம் இருந்து பெற்றார் என்பது குறித்து முருகையாவிடம் விஏஓ விசாரித்தார்.
வீரசிகாமணியை சேர்ந்த சுதாகர் என்பவர் இந்த இரண்டு சான்றிதழ்களையும் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் பணம் பெற்று வாங்கித் தந்ததாக முருகையா தெரிவித்தார். இதுகுறித்து மாரியப்பன் சேர்ந்தமரம் போலீசில் புகார் செய்தார்.
போலீஸார் சுதாகரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிறப்பு, இறப்பு, வருமானம், ஜாதி சான்றிதழ்கள் வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு போலி சான்றிதழ்களை வீட்டிலேயே தயாரித்து வழங்கியது தெரிய வந்தது. இவரிடம் பலர் ஏமாந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரது வீட்டை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது தாசில்தார், வருவாய் ஆய்வாளர், விஏஓ, மண்டல துணை தாசில்தார், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் அதிகாரி ஆகியோரது பெயர்களில் இருந்த போலி ரப்பர் ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அங்கிருந்து பல போலி சான்றிதழ்களையும் கைப்பற்றினர். இதையடுத்து சுதாகர் கைது செய்யப்பட்டார். கைதான சுதாகரின் தந்தை சிவகுமார் விஏஓவாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications