கல்பாக்கம்: ஆட்டோ-பஸ் மோதல், 5 பேர் பலி
சென்னை: ஷேர் ஆட்டோவும் அரசு பஸ்ஸூம் மோதிக் கொண்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி, அரசு பஸ் ஒன்று நேற்று இரவு 7 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது. சதுரங்கபட்டினத்தை அடுத்த வெங்கபாக்கம் பெருமாள் கோவில் அருகே, சென்று கொண்டிருந்தபோது, பஸ்ஸூக்கு முன்னால் பைக்கில் இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர்.
பைக்கை வேகமாக கடந்து சென்ற பஸ், எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதனால் ஷேர் ஆட்டோ, அப்பளம் போல நொறுங்கியது.
இந்த விபத்தில் கீரப்பாக்கத்தைச் சேர்ந்த உமா (19), கிளியம்மாள் (28) மற்றும் ஷேர் ஆட்டோ டிரைவர் முருகானந்தம் (18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் ஆட்டோ பயணிகள் மணிகண்டன் (20), சரோஜா (18) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கல்பாக்கம் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு பேர் இறந்தனர். மற்றவர்களின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் குறித்த தகவல் தெரியவில்லை.
ஷேர் ஆட்டோவில் வந்தவர்கள் அனைவரும் காண்டிராக்ட் கூலி தொழிலாளர்கள். அவர்கள் கல்பாக்கத்தில் வேலை முடித்து விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications