3 மாதங்கள் மூடப்படும் திருச்சி காவிரி பாலம்
திருச்சி: திருச்சி- சென்னை புறவழிச் சாலையில் உள்ள காவிரிப் பாலம் மூன்று மாதங்களுக்கு மூடப்படும் என்று மத்திய நெஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
திருச்சி- சென்னை புறவழிச் சாலையில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கட்டப்பட்டு வரும் புதிய பாலப் பணிகளை மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
புதிய பாலப் பணிகள் வரும் நவம்பர் மாதத்திற்க்குள் முடிக்கப்பட்டு, விரைவில் திறக்கப்படும். காவிரி ஆற்றில் நான்கு வழிச் சாலைக்காகக் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தில் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய பாலம் மூன்று மாதங்களுக்கு மூடப்படும்.
தற்போது கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் கீழ் காவிரியாற்றில் தண்ணீர் செல்வதால் கட்டுமானப் பொருள்கள், கனரக இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்கு போதிய இடவசதி இல்லை. அத்துடன், சம்பா பயிர் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதால் காவிரி ஆற்றில் தண்ணீரை தற்போது நிறுத்தவும் இயலாது.
எனவே, காவிரி ஆற்றில் கட்டப்பட்டு வரும் புதிய பாலப் பணிகள் விரைவாக நடைபெறுவதற்கு தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய காவிரிப் பாலத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் மாவட்ட கலெக்டர் கலந்து பேசிய பின்பு பாலத்தை மூடுவது குறித்த கலெக்டர் அறிவிப்பார் என்றார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications