குழந்தை கவலைக்கிடம்: போலி நர்ஸிடம் விசாரணை- மருத்துவமனைக்கு சீல்
சாத்தான்குளம்: போலி நர்ஸ் அளித்த சிகிச்சையால் மூன்றரை வயது குழந்தை கவலைக்கிடமாக உள்ளது. அந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் அருகேயுள்ள வசவப்பநேரியில் தொண்டு நிறுவனம் சார்பில் மருத்துவமனை ஒன்று இயங்கி வந்தது. அரசு மருத்துவர் ஒருவர் மாதம் ஒருமுறை அங்கு சென்று உதவி செய்து வருகிறார். மற்ற நாட்களில் முறையாக மருத்துவம் படிக்காத பெண் ஒருவர் சிகிச்சை அளிப்பதாக கூறப்படுகிறது.
வசவப்பநேரியை சேர்ந்த மகாலிங்கம், விவசாயி. இவரது மூன்றரை வயது மகன் சுப்புராம். காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சுப்புராமை கடந்த 26ம் தேதி அந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது அங்கு சாலைபுதூரை சேர்ந்த கிங்ஸ்லி என்பவரது மனைவி செல்வி, குழந்தைக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
சுப்புராமுக்கு செல்வி ஊசி போட்டு அனுப்பினார். சிறிது நேரத்தில் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. உடனடியாக பெற்றோர்கள் குழந்தையை நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மகாலிங்கம் சாத்தான்குளம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் மருத்துவமனைக்கு சென்று, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போலி நர்ஸ் செல்வியை விசாரணைக்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதையடுத்து மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications