தீவிரவாதத்துக்கு எதிராக போர் புரிய சோனியா அழைப்பு
பானிபட்: தீவிரவாதத்துக்கு எதிராகவும் சமூக பிரிவினைக்கு காரணமானவர்களை எதிர்த்தும் போரிட அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு மனை வழங்கும் திட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நாட்டில் தீவிரவாத சூழலை ஏற்படுத்த பயங்கரவாதம் மூலம் சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அவர்கள் நாட்டின் எதிரிகள். இதை அரசியல் ஆதாயமாக்கி நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
தீவிரவாதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்துவோரின் வஞ்சகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களை தோல்வியடையச் செய்ய வேண்டும். தேசிய பிரச்சனையாக உள்ள தீவிரவாதத்தை எதிர்த்து போராட மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
