'கிரீமிலேயர்': வருமான வரம்பு ரூ. 4.5 லட்சமாக உயர்ந்தது
டெல்லி: பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் பிரிவினருக்கான வருமான உச்ச வரம்பை ரூ. 4.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வசதியானவர்கள், ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சம் உள்ள குடும்பத்தினர், க்ரீமி லேயர் என அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக வருமான உச்சவரம்பு கடந்த 1993ம் ஆண்டு ரூ.1 லட்சமாகத் இருந்தது. கடந்த 2004ம் ஆண்டில் இது ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
பிற்படுத்தப்பட்டவர்களில் வசதி படைத்தவர்கள் என்ற பிரிவையே நீக்கி அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. மேலும் பல மாநில அரசுகள், வருமான உச்சவரம்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.
இதையடுத்து நடந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷனின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் டெல்லியில் கடந்த ஜூன் மாதம் நடந்தது.
தற்போதுள்ள விலைவாசியில் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சம் கொண்டவர்களால் குழந்தைகளுக்கு ஒழுங்காக கல்வி கூட தர முடியாது என கர்நாடக மாநில பிற்பட்டோர் நல கமிஷன் தலைவர் துவாரகநாத் கூறினார். இதனால் க்ரீமி லேயர் வரம்பை ரூ. 10 லட்சமாக உயர்த்துவதே பிற்பட்டோருக்கு உதவியாக இருக்கும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷனின் பரிந்துரையின் பேரில் சமூக நீதித்துறை இதுகுறித்து விவாதித்தது. உள்துறை, சட்டம், மனித வளம், மலைவாழ் மக்கள் உறவு உள்ளிட்ட அமைச்சகங்களுடன் விவாதம் நடந்தது.
கிரீமி லேயர் வரம்பை 2.5 லட்சத்தில் இருந்து ரூ.4.5 லட்சமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சம் தாஸ் முன்ஷி இன்று கூறினார்.
கிரீமி லேயர் உயர்த்தப்பட்டதற்கு எந்த அமைச்சரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கருத்துக்கள் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. பொது மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவோர் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது என்று சமூக நீதித்துறை அமைச்சகம் தெரவித்துள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications