இடி விழுந்ததில் அதிர்ச்சி அடைந்த 14 மாணவர்கள் மயக்கம்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே இடி விழுந்ததால் ஏற்பட்ட சத்தத்தால் அதிர்ச்சி அடைந்த 14 மாணவ, மாணவியர் மயக்கமடைந்தனர். அனைவரும் திருவள்ளூர் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் அருகே உள்ள மேலனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இன்று காலை தங்களது ஊர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது பலத்த இடியுடன் மழை பெய்தது.
அந்த சமயத்தில் ஒரு இடி அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகே பலத்த சப்தத்துடன் விழுந்தது. இதைக் கேட்ட 5 மாணவியர் உள்பட 14 பேர் மயக்கமடைந்தனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் உடனடியாக அனைவரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். 14 பேரும் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் திருவள்ளூர் மற்றும் மேலனூரில் பரபரப்பு ஏற்பட்டது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications