சென்னை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - பீதி
சென்னை: சென்னை பரங்கிமலை அருகே உள்ள பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஆனால் இது வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது.
பரங்கிமலை அருகே உள்ளது புழுதிவாக்கம். இங்குள்ள செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு இன்று காலை இரு தொலைபேசி அழைப்புகள் வந்தன.
எட்டரை மணிக்கு இந்த தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஒன்று லேன்ட்லைனிலிருந்தும், இன்னொன்று மொபைல் போனிலிருந்தும் வந்தன.
பள்ளிக் கூடத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறும் எனவும் அந்த போனில் பேசியவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து மோப்ப நாய்கள் சகிதம் போலீஸார் விரைந்து வந்தனர். வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் நிபுணர்களும் விரைந்து வந்தனர். பள்ளி முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
வகுப்பறைகளில் அப்போது பாடம் நடந்து கொண்டிருந்தது. இருப்பினும் வகுப்புகளுக்கு இடையூறு இல்லாமல் சோதனை நடந்தது. பள்ளியும் மூடப்படவில்லை.
இதையடுத்து புரளியைக் கிளப்பியது யார் என்று போலீஸார் விசாரித்தபோது நங்கநல்லூரைச் சேர்ந்த ஜான் (43), துரைப்பாக்கத்தைச் சேர்ந்த பிஜூ (37) ஆகிய இருவர் சிக்கினர். அவர்கள்தான் போன் செய்ததாக தெரிகிறது. அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications