உத்தப்புரத்தில் தொடர்ந்து பதட்டம் - ஊரே காலி - 30 பேர் கைது
மதுரை: மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. ஜாதிக் கலவரம் காரணமாக இதுவரை 520 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்தப்புரம் கிராமத்தில் உள்ள தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதியை இடித்தும் கூட அங்கு ஜாதிப் பிரச்சினை தீரவில்லை. இரு தரப்பும் அவ்வப்போது மோதிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் தலித் சமூகத்தினர் திருமண விழாவையொட்டி பட்டாசு போட்டதைத் தொடர்ந்து மோதல் மூண்டு பின்னர் அமைதி ஏற்பட்டது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அங்குள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோவில் சீரமைப்புப் பணி தொடங்கியது. கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து சுற்றுச் சுவரில் வர்ணம் பூசும் பணி நடந்து வந்தது. அப்போது ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள், வர்ணம் பூச எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு தாக்கியும் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் பத்து பேர் படுகாயமடைந்தனர். கலவரத்ைத அடக்க வந்த போலீஸாரும் இதில் காயமடைந்தனர். போலீஸ் ஜீப் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 520 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 110 பெண்கள் உள்பட 140 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் 30 ஆண்களைத் தவிர மற்ற பெண்களை போலீஸார் விடுவித்தனர்.
இந்த நிலையில் உத்தபுரம் ஊர் மக்கள் கிராமத்தை காலி செய்து விட்டு சென்று விட்டனர். போலீஸார் கைது செய்யக் கூடும் என்ற அச்சத்தால் அவர்கள் கிராமத்தை விட்டு சென்றுள்ளனர். இதனால் ஊரே வெறிச்சோடிக் கிடக்கிறது. பெருமளவிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications