மின்வாரிய ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு
சென்னை: மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் கருணை தொகை வழங்கப்படும்.
ஆண்டுதோறும் போக்குவரத்துத்து துறை, பால் வளத்துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது.
இதில் 8.33 சதவீதம் போனஸ், 11.67 சதவீதம் கருணைத் தொகையும் அடக்கம். இந்நிலையில் மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதல்வரின் ஆணைப்படி, தமிழக மின்சார வாரிய ஊழியர்களுக்கு 2007-08ம் ஆண்டுக்கான போனஸ் வழங்குவது குறித்து எரிசக்தித் துறை செயலாளர், மின்வாரிய தலைவர், மேலாண்மை இயக்குனர், அதிகாரிகள், அனைத்து தொழிற்சங்க தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மின் வாரியத்தின் தற்போதைய நிதிநிலையை கருத்தில் கொண்டு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி, 8.33 சதவீதம் போனஸூம், 11.67 சதவீதம் கருணைத் தொகையும் வழங்கப்படும். இதன் மூலம் 69,556 பணியாளர்கள் பயனடைவார்கள். மேலும் 2007-08ம் ஆண்டில் மின் வாரியத்தில் பணியாற்றிய 14,760 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் 5,627 பகுதி நேர ஊழியர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் கருணை தொகையும் வழங்கப்படும். இதனால் மின்வாரியத்துக்கு இந்தாண்டு ரூ.60.47 கோடி செலவாகும் என்று கூறியுள்ளார்.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications