ஒன்றரை வயதுக் குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரன்
கபூர்தலா: பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் ஒன்றரை வயது குழந்தை கொடூரமாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது. சுடுகாட்டில் போடப்பட்ட குழந்தையை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியின் குழந்தை அது. கபூர்தலாவின் வட்டச்சாலை பகுதியில் குடிசை போட்டு அந்தத் தொழிலாளி தனது குழந்தை மற்றும் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை அடையாளம் தெரியாத ஒரு நபர் அங்கு வந்து குழந்தையை எடுத்துக் கொண்டு மறைவிடத்திற்குச் சென்று இந்த கொடூரச் செயலை செய்துள்ளான். பின்னர் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் குழந்தையைப் போட்டு விட்டு போயுள்ளான்.
குழந்தையைக் காணாமல் தேடிய தந்தை, சுடுகாட்டில் ரத்தக் களறியாக தனது குழந்தை கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போய் குழந்தையை மீட்டார். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து விட்டு மருத்துவமனைக்கு குழந்தையுடன் விரைந்தார். குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக சிதைத்த கொடூரனை போலீஸார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications