காந்தமாலில் தொடரும் வன்முறை - பெண் கற்பழிப்பு
புவனேஸ்வர்: ஒரிசாவில் மதக் கலவரம் தாண்டவமாடி வரும் காந்தமால் மாவட்டத்தில் கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்ட பரபரப்பு நீங்குவதற்குள் இன்னொரு கற்பழிப்புச் சம்பவம் நடந்துள்ளது பதட்டத்தைக் கூட்டியுள்ளது.
ஒரிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையும், தாக்குதலும் சற்றும் ஓயவில்லை. மத்திய போலீஸ் பெருமளவில் குவிக்கப்பட்டும் கூட கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டுள்ளனர்.
சமீபத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக இன்னொரு பெண்ணும் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பெண் செப்டம்பர் 19ம் தேதி தன்னை ஐந்து பேர் கொண்ட கும்பல் கற்பழித்ததாக நேற்று போலீஸில் புகார் கொடுத்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் மனோஜ் பிரதான் என்பவரைக் கைது செய்துள்ளனர். நான்கு பேரை தேடி வருகின்றனர்.
தனது தாத்தாவுடன் வீட்டில் இருந்த போது இந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து தன்னை வெளியே இழுத்துச் சென்றதாக அவர் புகார் கூறியுள்ளார்.
இதற்கிடையே காந்தமால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல்கள், வீடுகள், சர்ச் எரிப்புகள் தொடர்ந்து கொண்டிருப்பதால் ஒரிசா மாநில அரசு திகைத்துப் போய் நிற்கிறது.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications