நாடு முழுவதும் கலவரங்கள்: தலைமை நீதிபதி கங்குலி கண்டனம்
சென்னை: நாட்டின் பாரம்பரிய வரலாற்றை சிதைக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்துவரும் கலவரங்கள், வன்முறைகள் கண்டனத்துக்குரியவை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த ஈத் மிலன் கூட்டத்தில் கங்குலி நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதத்தின் பெயரால் நடைபெறும் அனைத்து விதமான வன்முறைச் செயல்களையும் அனைத்து மதத்தினராலும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவை.
இந்த வன்முறைச் சம்பவங்கள் பெரும் கவலை அளிக்கின்றன. நமது நாட்டின் பாரம்பரிய வரலாற்றை சிதைக்கும் வகையில் இவை உள்ளன.
கொல்கத்தாவில் துர்கா பூஜையை இந்துக்களும், முஸ்லீம்களும் இணைந்து கொண்டாடுவதை நாம் இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும். நமது இந்திய மனங்களில் ஊறிப் போயுள்ள சகோதரத்துவ உணர்வு அது. அது கெடாமல் அனைவரும் பார்த்துக் கொள்ள வேண்டும். பொறுமை, சகிப்புத்தன்மை நமது ரத்தத்தில் உள்ளது. அதுதான் இந்த நாட்டின் உயிரும், உணர்வும் கூட.
சிறு சிறு பிரச்சினைகளுக்காக நாம் மோதிக் கொள்ளக் கூடாது. அவற்றைத் தாண்டி வர வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் உதவிக்கரம் நீட்ட வேண்டும். இந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார் அவர்.
இலங்கை துணைத் தூதர் பி.எம். அம்சா, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாட்ஷா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications