ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்: 300 பாமகவினர் கைது
ராணிப்பேட்டை: நேற்று கைது செய்யப்பட்ட வாலாஜாபேட்டை பாமக நிர்வாகிகள் இருவரை விடுதலை செய்யக்கோரி அக்கட்சியைச் சேர்ந்த 300 பேர் இன்று ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு வாலாஜாபேட்டையில் பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசியவர்கள் முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் வீராசாமி, துரைமுருகன் ஆகியோரையும் எம்பி கனிமொழி, எம்எல்ஏ காந்தி ஆகியோரையும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து அன்றைய தினம் இரவே வாலாஜாபேட்டை திமுக நகர செயலாளரும், நகர மன்ற தலைவருமான நித்தியானந்தம் தலைமையில் அவைத் தலைவர் சுந்தர், நகர மன்ற உறுப்பினர்கள் சதீஷ்குமார், ரமேஷ், மோதிலால் நேரு, சரவணன், சுகந்தி உள்ளிட்டோர் தரக்குறைவாக பேசியவர்களை கைது செய்ய கோரி வாலாஜாபேட்டை பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வாலாஜாபேட்டை போலீசார் நேற்று மாலை நகர பாமக செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் பூண்டி மோகன் ஆகியோரை கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் இருவரையும் விடுதலை செய்யக் கோரியும் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலாளரும் ஆற்காடு எம்எல்ஏமான கே.எல்.இளவழகன் தலைமை வகித்தார்.
போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடந்ததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார், தலைவர் ராஜரத்தினம், பொருளாளர் ஞானசவுந்தரி, நிர்வாகிகள் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications