கோவை, கிருஷ்ணகிரியில் மாதா சிலை உடைப்பு-பதட்டம்
கோவை: கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2 இடங்களில் மாதா சிலைகள் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே மதகொண்டப்பள்ளி கிராமம் உள்ளது. அங்கு சொல்லேபுரம் செல்லும் சாலையில் எமது மாதா என்ற ரோமன் கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி நுழைவாயிலில் சிறிய ஆலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் இரண்டரை அடியில் ஒன்றும், 4 அடி உயரத்தில் மற்றொரு ஒன்றும் மாதா சிலைகள் உள்ளன.
நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த ஆலயத்துக்குள் புகுந்த மர்மநபர்கள் சிலைகளை சேதப்படுத்தியுள்ளன. இரண்டரை அடி உயர மாதா சிலையை சேதப்படுத்தி பள்ளி சுற்றுச்சுவர் அருகே வீசிவிட்டு சென்றுள்ளனர். 4 அடி உயர மாதா சிலையை காணவில்லை.
காலையில் இதை கிறிஸ்தவர்கள் அதிர்ச்சி அடைநதனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில்...
இதேபோல, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஒரு வீட்டின் சுவற்றில் இருந்த சிறிய மேரி மாதாவின் சிலை சேதப்படுத்தப்பட்டு கிடந்தது. இந்த இரு சம்பவங்களிலும் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதற்கு போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications