மனைப் பட்டா கோரி சிபிஎம் பேரணி: டிச. 15ல் முற்றுகை
சென்னை: சென்னை மாநகரை உருவாக்கிய உழைப்பாளி மக்களுக்கான குடிமனைப்பட்டா வழங்குவதில் தொய்வு ஏற்பட்டால் டிசம்பர் 15ம் தேதியன்று மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார். இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அக்கட்சியின் சார்பில் பேரணியும் நடைபெற்றது.
சென்னை பெருநகரின் வேகமான வளர்ச்சிப் போக்கில் பல மடங்காக பெருகி வந்த மக்கள் தொகைக்கு ஏற்ப குடியிருப்பு பிரச்சனை தொலை நோக்குடன் அணுகப்படாததன் விளைவாக உழைக் கும் மக்கள் பலர் தூர்ந்துபோன ஏரி, நீர்நிலை நிலங் களில் குடியேறியுள்ளனர்.
இந்த நீர்நிலைகள் தமது பயன்பாட்டை இழந்துவிட்ட நிலையில் பல ஆண்டு காலமாக இந்த இடங்களில் வசித்து வரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்ததை திரும்பப் பெறக் கோரியும், பெருநகர எல்லைக்குள் பயன் பாட்டை இழந்த நீர்நிலைகளை அடையாளம் கண்டு அவற்றை குடியிருப்பு பகுதிகள் என கொள்கை முடிவு எடுத்து சிறப்பு ஆணை வெளியிட வலியுறுத்தியும், மனைப்பட்டா வழங்குவதற்கு ஏற்ப நிலங்களை வகைமாற்றம் செய்யக்கோரியும் சென்னையில் திங்களன்று மாபெரும் பேரணி நடைபெற்றது.
அதேபோல் சென்னையின் பல்வேறு நீர்வழி கரை யோரங்களில் வசிக்கும் உழைக்கும் மக்களை தொலை தூர புறநகர் பகுதிகளுக்கு விரட்டுவது அவர்களது வாழ்வுரிமையை பறிக்கும் செயலாகும் என்று சுட்டிக்காட்டியும், அவர்களுக்கு பட்டா வழங்குவதோடு அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரியும் இந்தப் பேரணி நடைபெற்றது.
குடிசைமாற்று வாரிய மனைத்திட்டத்தில் அமைந்த பகுதிகளுக்கு தண்டம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்தி, மேம்படுத்தப்பட்ட குடிசைப் பகுதிகள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அமைந் துள்ள குடியிருப்புகளுக்கு இலவச குடிமனைப் பட்டா வழங்கவும் பேரணி யில் வலியுறுத்தப்பட் டது. தற்போதைய அரசாணை யின்படியே சென் னையில் இலவச பட்டா பெற தகுதி உள்ள கலெக்டர் அலுவலக நிலம், மாநகராட்சி நிலம், அரசு நிர்வாக அமைப்புகள் ஒதுக்கிய நிலங்கள் ஆகியவற்றில் குடியிருப் போருக்கு துரிதமாக மனைப்பட்டா வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.
இந்து சமய கோவில் நிலங்களில் குடியிருப்பதற்கு பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி என அறிவித்து குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் அவர்கள் ஆக்கிரமிப்பாளராக கருதி வெளியேற்றப் படுவார்கள் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த கோவில் நிலங்களை அரசே கையகப்படுத்தி நலிந்த மற் றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு இலவச பட்டா வழங்கி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பேரணியில் முன் வைக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கட்சியின் பேரணி அறிவிப்பை ஏற்று மன்றோ சிலை அருகில் காலையிலிருந்தே சென்னையின் அனைத்துப் பகுதி களையும் சேர்ந்த மக்கள் குழுமத் தொடங்கிவிட்டனர். பேரணி தொடங்கி அரசு விருந்தினர் மாளிகை அருகில் பொதுக்கூட்டம் நிறைவடையும் நிலையில் கூட ஏராளமானோர் வந்து ஊர்வலத்தில் சேர்ந்து கொண்டனர்.
பங்கேற்ற பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை ஒரு தனி வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டனர். இவ்வாறு சுமார் 15 ஆயிரம் மனுக்கள் சேர்ந்தன. அந்த மனுக்கள் பின்னர் முதலமைச்சர் அலு வலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக என்.வரத ராஜன் தலைமையில் கட்சியின் மத்தியக் குழு உறுப் பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி, வடசென்னை மாவட்டச் செயலாளர் டி. கே.சண்முகம், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பீம்ராவ், இந்து சமய கோவில் மனை குடியிருப்போர் சங்க ஆலோசகர் ஸ்ரீதரன், கே.நடராஜன் ஆகியோர் கோட்டையில் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து கட்சியின் சார்பில் மேற்கண்ட 5 கோரிக்கைகளுக்கான மனுக்களை அளித்தனர்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டவற்றில் 101 மனுக்களை முதலமைச்சரிடம் ஒப்படைத்தனர்.
முதலமைச்சரை சந்தித்து விட்டு பேரணியில் கலந்துகொண்ட என்.வரத ராஜன், பொதுக்கூட்டத்தில் நிறைவுரையாற்றினார்.
இந்த மக்களின் குடி மனைப்பட்டா கோரிக்கைக்காக மற்ற பெரிய கட்சிகள் என்ன செய்தன என்று கேள்வி எழுப்பிய அவர், சென்னையில் இனி பட்டா கொடுக்க இடமில்லை என்று கூறிய முதலமைச்சர் தற்போது ஓராண்டு காலத்திற்கு பட்டா வழங்கலுக்கான கால அவகாசத்தை நீட்டித் திருப்பதற்கு இந்த பெரும் கூட்டமே காரணம் என்றார்.
முதலமைச்சரை சந்தித்தபோது, கோரிக்கைகளை நிதானமாக அவர் கேட்டுக் கொண்டார். அந்த நிதானத்தை ஏற்படுத்தியது இந்த மாபெரும் பேரணிதான் என்றார்.
அரசாங்கத்தின் கொள்கையை எதிர்த்தும் அதிகாரிகளின் கொள்ளையை எதிர்த்தும் நடைபெறும் இந்தப் போராட்டம் தொடரும், வளரும் என்று கூறிய அவர், கேரள மாநிலம் அருகில்தான் உள்ளது. கோவில் நிலங்களை அதில் குடியிருந்த ஏழைகளுக்கு பட்டா போட்டுக் கொடுத்த முதல் அரசு இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அரசுதான். தமிழகத்தில் தரிசு நிலங்கள் ஒன்றரை லட்சம் ஏக்கர் தான் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் 20 லட்சம் ஏக்கர் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, முத லமைச்சர் இப்பிரச்சனையை நிதானத்தோடு அணுகி, பட்டா வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications