புதுவை திமுக சார்பில் பிரதமருக்கு 5000 தந்திகள்
புதுச்சேரி: இலங்கையில் தமிழர்கள் இனபடுகொலை செய்யப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு புதுச்சேரி மாநில திமுக சார்பில் 5,000 தந்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் உக்கிரமான போர் நடந்து வருகிறது. இதில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். லட்சக் கணக்கான தமிழர்கள் வீடின்றி உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். பாதுகாப்பற்ற சூழலில் திக்கற்றுள்ளனர். இதனை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா தலையிட வேண்டும் என்று பிரதமரை தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார்.
மேலும் பிரதமருக்கு லட்சக்கணக்கான தந்திகள் அனுப்ப வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து திமுகவினர் கடந்த இரு தினங்களாக ஆயிரக்கணக்கான தந்திகளை அனுப்பி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து புதுவை திமுக அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் தந்திகளை பிரதமருக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோன்று விடுதலை வேங்கை, பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றின் சார்பில் தலா 100 தந்திகள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications