For Daily Alerts
Just In
சென்னை அருகே இன்டர்சிட்டி ரயில் தடம் புரண்டது
சென்னை: சென்னை வில்லிவாக்கம் அருகே இன்டர் சிட்டி ரயில் தடம் புரண்டது.
கோவையில் இருந்து சென்னைக்கு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் திரும்பிக் கொண்டிருந்தது. சென்னை அருகே உள்ள வில்லிவாக்கம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் எருமை மாடு ஒன்று கடக்க முயன்றது.
உடனடியாக பிரேக் போட முயன்றார் என்ஜின் டிரைவர். இருப்பினும் மாட்டின் மீது ரயில் மோதியது. இதில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் பயணிகள் உயிர் தப்பினர்.
தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.