அணு ஒப்பந்த சட்டம்: கையெழுத்திட்டார் புஷ்

இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான சட்ட மசோதாவுக்கு சமீபத்தில் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அதை சட்டமாக்க அதிபர் புஷ் கையெழுத்துக்கு அது அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கையெழுத்திடும் நிகழ்ச்சி அதிபர் மாளிகையின் கிழக்கு அறையில்நடந்தது. வெளியுறவு அமைச்சர் ரைஸ் உள்ளிட்டோர் புடை சூழ அதிபர் புஷ் சட்டத்தில் கையெழுத்திட்டார்.
பின்னர் புஷ் பேசுகையில், இந்த சட்டம், இரு நாட்டு அணு சக்தி பயன்பாட்ைட அதிகரிக்கும். சக்தி வாய்ந்த பொருளாதார நாடுகளாக இரு நாடுகளும் திகழ வழி வகுக்கும். இன்னும் நெருக்கமாக இரு நாடுகளும் இணைந்து செயல்பட வழி வகுக்கும்.
அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் முன்பை விட மேம்பட்டுள்ளன. சமீப காலத்தில், இரு நாடுகளும் உறுதியான நட்பை மேம்படுத்தியுள்ளன.
நாம் வளர்ந்திருப்பதைப் போலவே நமது எரிசக்தி தேவைகளும் வளர்ந்து விட்டன. பாதுகாப்பான, சுத்தமான எரிசக்தியை நாம் பெற வேண்டிய, உற்பத்தி செய்ய வேண்டிய கட்டத்தில் உள்ளோம். காற்றை மாசுபடுத்தாத அளவில் பெரிய அளவில் நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது.
எனது எட்டு கால ஆட்சியில் மிகச் சிறந்த வெளியுறவுக் கொள்கை சாதனையாக இந்த அணு சக்தி ஒப்பந்தத்தை கருதுகிறேன். பிரதமர் மன்மோகன் சிங் எனது மிகச் சிறந்த நண்பர். அமெரிக்காவும், இந்தியாவும் இயற்கையான நண்பர்கள் என்றார் அவர்.
கையெழுத்திடும் நிகழ்ச்சியின்போது துணை அதிபர் டிக் செனி, ரைஸ், எரிசக்தித் துறை அமைச்சர் சாமுவேல் போட்மேன், இந்தியத் தூதர் ரோனென் சென் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாளை பிரணாப் - ரைஸ் கையெழுத்து
அதிபர் புஷ் சட்டத்தில் கையெழுத்திடுள்ளதைத் தொடர்ந்து நாளை பிரணாப் முகர்ஜியும், கான்டலீசா ரைஸும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளனர்.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான அணு சக்தி ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வரும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications