அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட யு.எஸ் கிளம்பினார் பிரணாப்
டெல்லி: அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று வாஷிங்டன் புறப்பட்டு சென்றார். இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்.
இந்தியா, அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்தம் குறித்த சட்ட மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அதிபர் புஷ் சட்டத்தில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து வெளியுறவு அமைச்சர் ரைஸ் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட வேண்டும். சில கால இழுபறிக்கு பின்னர் புஷ் கையெழுத்திட்டதை அடுத்து வரலாற்று சிறப்பு மிக்க அணு ஒப்பந்தத்தில் அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமைச்சர் கண்டலிசா ரைசும் இன்று கையெழுத்திடுகின்றனர்.
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 1.30 மணிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. வாஷிங்டனிலுள்ள வெளியுறவு அமைச்சகத்தின் பெஞ்சமின் பிராங்கிளின் அறையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமாகிறது.
இதனிடையே, இந்த ஒப்பந்தம் குறித்தும், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பிரணாப் முகர்ஜியும், கண்டலிசா ரைசும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உடனேயே இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் கடந்த 34 ஆண்டுகளாக சர்வதேச நாடுகள் அணு வர்த்தகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இந்தியா, மீள்கிறது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications