இலங்கையில் கடும் போர் - 54 விடுதலைப் புலிகள் பலி
கொழும்பு: கிளிநொச்சி அருகே புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 54 புலிகள் கொல்லப்பட்டனர். 8 ராணுவ வீரர்கள் பலியாயினர். இந்நிலையில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு 6.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே பயங்கர சண்டை நடந்து வருகிறது. கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் ராணுவம் முழு வீச்சில் இறங்கியுள்ளது. இதனால் தமிழர்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
கிளிநொச்சிக்கு ஒரு மைல் தூரத்தில் ராணுவ துருப்புகள் புலிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்புக்கும் இடையே நேற்று நடந்த தாக்குதலில் 54 புலிகளும், ராணுவத் தரப்பில் 8 வீரர்களும் கொல்லப்பட்டனர்.
நேற்று முன்தினம் முல்லைத்தீவு மற்றும் வன்னிக்குளம் பகுதியில் கடும் சண்டை நடந்ததாக ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயக்கரா தெரிவித்தார்.
ராணுத்தின் தாக்குதலை முறியடிக்கவும் ஒடுக்கவும் புலிகள் தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர. எனினும் போர் உக்கிரநிலையை அடைந்துள்ளது. ராணுவத்தின் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலை சமாளிக்க வேண்டியுள்ளது.
இதையடுத்து தனது தற்கொலை படை தாக்குதலை புலிகள் தொடங்கியுள்ளன. கடந்த 6ம் தேதி அனுராதபுரத்தில் புலிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் முன்னாள் ராணுவ தளபதி, அவரது மனைவி உள்பட 29 பேர் பலியாயினர்.
இந்நிலையில் பெண் விடுதலை புலி நடத்திய தற்கொலை தாக்குதலில் அமைச்சர் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார். அமைச்சரின் பாதுகாப்பு வீரர் ஒருவர் இதில் பலியானார். 6 பேர் படுகாயமடைந்தனர்.
ராணுவ நிதி அதிகரிப்பு:
இந்நிலையில் 2009ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அந்நாட்டு அரசு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. ராணுவ அமைச்சக மானிய கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ராணுவத்துக்கான நிதி 6.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம். ராணுவத்துக்கு ரூ.17,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த பட்ஜெட் 18 சதவீதமாகும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications