மீனவர்களின் வலைகளை அறுத்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கி அட்டகாசம் செய்துள்ளனர். தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து கடலில் வீசியுள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அவர்கள், தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர்.

பின்னர் தமிழக மீனவர்களின் படகுகளை, தங்களது துப்பாக்கியான் பின்புறத்தால் அடித்து சேதப்படுத்தினர். வலைகளையும் அறுத்து எறிந்தனர். பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் தூக்கி வீசினர். பின்னர் சில மீனவர்களை உடைகளை கழற்றச் சொல்லி விட்டு அடித்து சித்திரவதை செய்தனர்.

பின்னர் மீனவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்து விட்டு அங்கிருந்து சென்றது இலங்கைப் படை. இலங்கைப் படையினரின் இந்த செயலால் தமிழக மீனவர்கள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+