சத்து மாத்திரை சாப்பிட்ட சிறுவன் பலி - 16 சிறார்கள் கவலைக்கிடம்
தென்காசி: நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் அருகே 9 சத்து மாத்திரைகளை சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஒரு மாணவி கவலைக்கிடமாக இருக்கிறார். 15 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கீழப்பாவூர் அருகே உள்ள பூலான்குளம் கிராமத்தில் ஊராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இன்று இங்கு அரசு ஆரம்ப சுகாதாரத்துறை சார்பில் ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. பின்னர் மாணவ, மாணவியருக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மாத்திரை இனிப்பாக இருக்கிறதே என்று பொன்னு என்கிற முத்தையாவின் மகன் செல்வக்குமார் (10) 9 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளான். இதையடுத்து அவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தான். சிறிது நேரத்தில் செல்வக்குமார் பரிதாபமான முறையில் உயிரிழந்தான்.
இதேபோல மதுபாலா என்கிற மாணவி இன்னொரு மாணவனிடமிருந்து மாத்திரையை வாங்கி சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரைப் போல மேலும் 15 மாணவர்களுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து 16 பேரும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மதுபாலாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாணவ, மாணவியரின் பெற்றோர்களும், ஊர் மக்களும் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் மருத்துவமனையில் அவர்கள் குவிந்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications