தடை செய்தால் மத்திய அரசு தேர்தலில் தோற்கும்: பஜ்ரங் தளம்
டெல்லி: ஒரிசாவில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து நடந்த வன்முறைக்கும், பஜ்ரங் தளத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களை தடை செய்தால் மத்திய அரசு வரும் தேர்தல்களில் தோல்வியைத் தழுவும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து பஜ்ரங்தளத்தின் தேசிய அமைப்பாளர் பிரகாஷ் சர்மா கூறுகையில், ஒரிசாவில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதை யொட்டி நடந்த வன்முறையில் 35 ஏழை கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்கும், எங்கள் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஊடகங்கள்தான் எங்களை எதிர்மறையாக சித்தரிக்கின்றன.
2006ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நான்டேட் என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கான்பூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர் 10 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் இயக்கத்தில் இருந்து வெளியேறியவர்.
பஜ்ரங்தள் இயக்கத்தை தடை செய்வது என்றால் காங்கிரசையும் தடை செய்ய வேண்டும். 1993ம் ஆண்டு சூரத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பிடிபட்டு தற்போது 20 ஆண்டு சிறை தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.
பஜ்ரங்தள் இயக்கத்தை தடை செய்தால் பாதிப்பு மத்திய அரசுக்குத்தான். தடையை எதிர்த்து மக்களிடம் சென்று நீதி கேட்போம். தேர்தல்கள் விரைவில் வர உள்ள நிலையில் மத்திய அரசு தோல்வியை சந்திக்க நேரிடும் என்றார் சர்மா.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications