ஜம்மு - காஷ்மீரில் நவம்பரில் 4 கட்ட தேர்தல்?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 3 அல்லது நான்கு கட்ட தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக மத்திய அரசு தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்து வந்தது. அமர்நாத் நில விவகாரத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி விலக்கிக் கொண்டதால் ஆசாத் அரசு கவிழ்ந்தது.
இந்த நிலையில் அங்கு அடுத்த மாதம் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம், தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்துள்ளது. 3 அல்லது 4 கட்டமாக தேர்தலை நடத்தலாம் எனவும் அது தெரிவித்துள்ளது.
தேர்தல் பாதுகாப்புக்குத் தேவையான போலீஸ் படை மற்றும் இதர ஏற்பாடுகளும் போதிய அளவுக்கு இருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications