நிலவுக்குச் செல்ல சந்திராயன்-1 தயார் - 22ம் தேதி ஏவப்படுகிறது
சென்னை: இந்தியாவின் முதலாவது ஆள் இல்லாத நிலவு விண்கலமான சந்திராயன்-1 ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் ஏவுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 22ம் தேதி காலை 6.20 மணிக்கு பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சந்திராயன் நிலவுக்கு பயணிக்கவுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறுகையில், சந்திராயன்-1 விண்கலம் கடைசிக் கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் பொருத்தப்படுவதற்காக அது பொருத்து தளத்திற்கு கொண்டு செல்லப்படும்.
அனைத்தும் சரியாக நடந்தால், சந்திராயன் பொருத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. ராக்கெட், லான்ச்சிங் பேடுக்கு 17ம் தேதி கொண்டு செல்லப்படும்.
காலநிலை இதில் முக்கியமானது. வானிலை சரியாக இருந்தால் திட்டமிட்டபடி ஏவப்படும். இல்லாவிட்டால், சற்று தாமதப்படும். 22ம் தேதி முதல் 28ம் தேதிக்குள் ஏவலாம் என திட்டமிட்டுள்ளோம் என்றார் நாயர்.












Click it and Unblock the Notifications