சென்னை சர்ச் மீது தாக்குதல் - கண்ணாடிக் கூண்டு உடைந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை திருமங்கலத்தில் உள்ள சர்ச்சில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காம்பவுண்டு சுவரில் உள்ள கண்ணாடிக் கூண்டு உடைந்தது.
தமிழகத்தில் ஆங்காங்கு கிறிஸ்தவ ஆலயங்கள் மீது சில விஷமிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கல்லறையைக் கூட விடாமல் தாக்கியுள்ளனர் விஷமிகள். இந்த நிலையில் தலைநகர் சென்னையிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திருமங்கலம் தங்கம் காலனியில் சிஎஸ்ஐ சர்ச் உள்ளது. சர்ச்சின் முன்பு உள்ள சுற்றுச்சுவரில் கண்ணாடிக் கூண்டு அமைக்கப்பட்டு அதில் பைபிள் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை ஆலயத்தை திறக்க வந்தபோது, கண்ணாடிக் கூண்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருமங்கலம் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications