கடலூரிலிருந்து துபாய்க்கு மினி கப்பல்
கடலூர்: கடலூரிலிருந்து துபாய்க்கு விரைவில் எம்.எஸ்.வி. சூரிய கேசரி என்ற மினி கப்பல் விடப்படவுள்ளது. தனியாருக்குச் சொந்தமான இந்தக் கப்பலின் எடை 750 டன்கள் ஆகும். இதற்கான நீராட்டு விழா கடலூர் துறைமுகத்தில் நடந்தது.
கடலூர் துறைமுகம் தைக்கால் தோணித்துறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த கப்பலை உருவாக்கி உள்ளனர். இந்த கப்பலின் நீளம் மேல்புறம் 141 அடியும், கீழ் புறம் 131 அடியும், 6 அடி அகலமும் 22 அடி உயரமும் கொண்டதாகும்.
இது ஒரு சரக்கு கப்பலாகும். ரூ. 3 கோடி செலவில் கட்டப்பட்டு நேற்று நீராட்டு விழா நடைபெற்றது. இந்த மினி கப்பல் இன்னும் சில நாட்களில் தூத்துக்குடி சென்று உப்பு ஏற்றிக்கொண்டு கொச்சி செல்கிறது.
அங்கிருந்து குஜராத், போர்பந்தர், துபாய், அந்தமான் நிக்கோபார், மாலத்தீவுகள், பாகிஸ்தான், கார்வார் போன்ற இடங்களில் இந்த கப்பல் ரசாயனப் பொருட்கள், கோதுமை, அரிசி, உரம், கயிறு போன்ற பொருட்களை ஏற்றிச் செல்லும்












Click it and Unblock the Notifications