அதிகார துஷ்பிரயோகம்: சாரா பாலின் மீதான புகார் நிரூபணம்
அலாஸ்கா: அமெரிக்க துணை அதிபர் பதவிக்கான குடியரசு கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சாரா பாலின் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.
அலாஸ்காவின் கவர்னராக பதவி வகித்து வந்தபோது சாராபாலின் தனது உறவினர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாகவும், அதற்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து ஸ்டீபன் பிராஞ்ச் பிளவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 263 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் சாரா பாலின் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததும், விதிகளை மீறியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிபர் வேட்பாளர் மெக்கைன் மற்றும் சாரா பாலினின் ஆதரவாளர்கள் இந்த விசாரணை அறிக்கை அதிபர் தேர்தலுக்கு பிறகே வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் முன்னதாகவே விசாரணை முடிவு வெளியாகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications