மத்திய சுகாதாரத் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பில்லை! - அன்புமணி
வேலூர்: மத்திய சுகாதாரத்துறையின் திட்டங்களுக்கு தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு தருவதில்லை. ஒத்துழைத்தால் இன்னும் பல திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி கூறினார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம்- காட்பாடி ரயில் மார்க்கத்தில் அரக்கோணம், பாணாவரம், கொளத்தேரி பகுதிகளில் ரூ.61.36 கோடி செலவில் கட்டப்பட உள்ள 3 ரயில்வே மேம்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா அரக்கோணத்தில் நடைபெற்றது.
மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தலைமை வகித்தார். மாநில அமைச்சர்கள் துரைமுருகன், வெள்ளக்கோயில் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய அமைச்சர் அன்புமணி புதிய ரயில்வே மேம்பாலங்களுக்கான அடிக்கல்லை நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:
இந்தியாவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதாரத் திட்டப்பணிகளை உலக வங்கி அலுவலர்கள் உள்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்து பார்க்கின்றனர். இத்திட்டங்களை அந்நாடுகளில் செயல்படுத்த அறிந்து செல்கின்றனர்.
தமிழக அரசு ஒத்துக்கவில்லை:
இந்திய அளவில் சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம் வகித்தாலும் பல்வேறு திட்டங்களுக்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லை.
சென்னையில் எழும்பூர் மருத்துவமனையை தரம் உயர்த்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு கடந்த ஓராண்டாக ஒரு சின்ன வேலை கூட நடக்கவில்லை.
உலகத் தரம் வாய்ந்த சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒன்றை சென்னை அருகே அமைக்கப்பட உள்ளது. அதற்கு தேவையான 5 ஏக்கர் நிலத்தை 4 ஆண்டுகளாகியும் ஒதுக்கித் தராமல் தமிழக அரசு மௌனம் காத்து வருகிறது.
தமிழக அரசு ஒத்துழைத்தால் இன்னும் பல திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்த முடியும். இவ்விழாவில் பங்கேற்றுள்ள மாநில அமைச்சர்கள் இது பற்றி தமிழக முதல்வருக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்றார்.
புதிய திட்டங்கள்:
பின்னர் மத்திய அமைச்சர் ஆர்.வேலு பேசுகையில், பயணிகள் வசதிக்காக ரயில்வேத் துறை ஆண்டுதோறும் ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செய்து வருகிறது.
திண்டிவனம், நகரி, எண்ணூர், புத்தூர் உள்பட 7 புதிய ரயில் பாதைகள் அமைக்கும் பணிக்கு திட்டக்குழு அனுமதி வழங்கியதை தொடர்ந்து அப்பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த ஆண்டு ரயில்வேத் துறைக்கு ரூ.25,000 கோடி உபரி வருமானம் கிடைத்தது. ரயில் கட்டணம், சரக்கு போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தாமலேயே இவ்வளவு உபரி வருமானம் கிடைத்ததற்கு ரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்ட புதிய செயல் திட்டங்களும், பணியாளர்களுமே காரணம்.
வருகின்ற 5 ஆண்டு திட்டத்தில் ரயில்வேத் துறைக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றார்.
திமுக அமைச்சர்களுக்கு எதிரிலேயே, மத்திய அமைச்சர் அன்புமணி மாநில அரசை குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications