தினமும் ரூ. 20 கோடி நஷ்டம்: சமாளிக்க ஜெட் ஏர்வேஸ்-கிங் பிஷ்ஷர் கூட்டணி
மும்பை: நாட்டின் முன்னணி தனியார் விமான நிறுவனங்களான ஜெட் ஏர்வேசும், கிங் பிஷ்ஷர் ஏர்லைன்சும் நஷ்டத்திலிருந்து தப்ப கூட்டணி அமைத்துள்ளன.
விமான எரிபொருளின் விலை உயர்வாலும் பல்வேறு பொருளாதார காரணங்களாலும் உலகம் முழுவதும் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
இந்திய நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கிட்டத்தட்ட 65 சதவீத பயணிகள் சந்தையை கையில் வைத்துள்ள கிஷ் பிஷ்ஷர் மற்றும் ஜெட் ஏர்வேஸ் இரண்டும் நாளொன்றுக்கு ரூ. 20 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
இரு நிறுவனங்களும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதை நிறுத்தினால் நஷ்டத்தை குறைக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இந் நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயலை கிங் பிஷ்ஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையா நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது இரு நிறுவனங்களும் கூட்டணி அமைத்து செயல்படுவது என்றும், போட்டியைக் கைவிடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
ஒரே ரூட்டில் இரு நிறுவனங்களும் அதிக விமானங்களை இயக்குவதைக் குறைப்பது, கோட் ஷேரிங், இரு நிறுவன விமான ஊழியர்களையும் இருவரும் பயன்படுத்திக் கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மல்லையாவும் கோயலும் விமானத்துறை இணையமைச்சர் பிரபுல் படேலை சந்தித்துப் பேசினர். அப்போது இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட விமானத்துறை அனுமதி வழங்கியதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications