அமைச்சர் தாஸ்முன்ஷி தொடர்ந்து கவலைக்கிடம்
டெல்லி: இருதய நோய் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் அன்புமணி கூறினார்.
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி (62) இருதய நோய் பாதிப்பு ஏற்பட்டு நேற்று அதிகாலை டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக் கிடமாக உள்ளது என்று டாக்டர் டி.கே.சர்மா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி, நேற்று தாஸ்முன்ஷியை சென்று பார்த்தார். பின்னர் அவர் கூறுகையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனைக்கு அவரை கொண்டு வந்தபோது நாடித்துடிப்பை உணர முடியவில்லை. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது நாடி சரியாக உள்ளது என்றார்.
தாஸ்முன்ஷியின் ரத்த அழுத்தம், இருதய துடிப்பு மற்றும் சுவாசம் ஆகியவை சீரடைந்துள்ள போதிலும் அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது.
தாஸ்முன்ஷியின் இருதயத்தில் இருந்து உடலுக்கு ரத்தத்தை பம்பு செய்யும் இடது வென்ட்ரிக் சரியாக செயல்படவில்லை என்றும் இதன் காரணமாக அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு இருப்பதுடன் அவரது நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாதம் தாஸ்முன்ஷி இருதய நோயால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாஸ்முன்ஷியை மக்களவை சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் சென்று பார்த்தனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications