தத்தளிக்கும் வங்கிகளுக்கு மேலும் ரூ.25,000 கோடி!

வங்கிகளின் ரொக்கப் புழக்கம் மற்றும் இருப்புத் தன்மையை மேம்படுத்தவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.
பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய ரிசர்வ் வங்கி மூன்று கட்டுப்பாடுகளை வணிக வங்கிகள் மீது விதித்தது. அதில் முக்கியமானது சிஆர்ஆர் எனப்படும் ரொக்க இருப்பு விகிதம். அதை சமீபத்தில்தான் 1.5 சதவிகிதம் வரை குறைத்து பணப் புழக்கத்தை அதிகரித்தது.
அடுத்து, வணிக வங்கிகளுக்கு தான் வழங்கும் குறுகிய கால கடன்களின் மீது கடுமையான வட்டியை விதித்தது ரிசர்வ் வங்கி. இதனை வங்கி வட்டி விகிதம் அதாவது ரெபோ ரேட் என்கிறார்கள். இதையும் தற்போது 2 சதவிகிதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது.
அடுத்து, அரசுத் திட்டங்களுக்காக நிதி திரட்ட வெளியிடப்படும் பத்திரங்களில் குறிப்பிட்ட அளவு தொகையை முதலீடு செய்தாக வேண்டும் அனைத்து வங்கிகளும் (எஸ்எல்ஆர்). இந்த முதலீட்டு அளவையும் 2 சதவிகிதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது ரிசர்வ் வங்கி. இதன் மூலம் மட்டுமே ரூ.70 ஆயிரம் கோடி கூடுதல் பணப் புழக்கம் ஏற்படும்.
இத்துடன் நில்லாமல், வணிக வங்கிகள் தள்ளுபடி செய்த விவசாயக் கடன்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.25 ஆயிரம் கோடியை உடனடியாக ரிலீஸ் செய்யவும் ரிசர்வ் வங்கிக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது மத்திய நிதி அமைச்சகம்.
இந்த தளர்வுகள் எந்த அளவு ரொக்கப் புழக்கத்தை அதிகரித்து, வங்கிகளின் செயல்பாட்டை நிதானத்துக்குள் கொண்டு வரப் போகின்றன என்பது போகப் போகத்தான் தெரியும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications