திவால் வதந்தி: மும்பை போலீசில் ஐசிஐசிஐ பரபரப்பு புகார்
மும்பை: திவால் வதந்திகள் மூலம் தங்கள் வங்கியின் பங்கு மதிப்பை வீழ்ச்சியடைச் செய்ய முயலும் சில புரோக்கர்களை கண்டுபிடித்து தண்டிக்குமாறு மும்பை போலீசாரிடம் ஐசிஐசிஐ வங்கி திங்கள்கிழமை புகார் தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையர் மற்றும் வெளி நபர்களுக்கு ஒரு மர்ம எஸ்எம்எஸ் வந்தது. அதில், ஐசிஐசிஐ வங்கி விரைவில் திவால் ஆகப் போகிறது. இப்போது தனது திவால் அறிவிப்பு குறித்த கடிதத்தை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்துள்ளது. எனவே அந்த வங்கியில் உள்ள உங்கள் கணக்குகளை முடித்துக் கொள்ளுங்கள், என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வதந்தி வேகமாகப் பரவ அடுத்த சில மணி நேரங்களில் மளமளவென ஐசிஐசிஐ பங்குகளின் மதிப்பு சரிந்தது. வெள்ளிக்கிழமை மட்டும் இத்தகைய வதந்திகளால் 19 சதவிகிதம் வரை ஐசிஐசிஐ பங்குகள் விலை சரிந்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து வங்கியின் இயக்குநர் கே.வி. காமத் தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் உறுதித் தன்மை குறித்து அறிகத்கை வெளியிட்டு அமைதிப்படுத்தினார்.
இந்த வதந்திகளின் பின்னணி குறித்து வங்கியின் புலானாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணையில், இது திட்டமிட்ட சதி என கண்டுபிடிக்கப்பட்டது.
மும்பை இணைக் கமிஷனர் ராகேஷ் மரியாவிடம் இதுகுறித்து 22 பக்கங்கள் கொண்ட புகார் மனு வங்கியின் இயக்குர் காமத் சார்பில் வழங்கப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட இணையதளத்தின் எஸ்எம்எஸ் சேவை மூலம் 15500 பேர்களுக்கு ஐசிஐசிஐ பற்றி தவறான தகவல்களைப் பரப்பியுள்ளனர் சிலர் பங்குச் சந்தை தரகர்கள் என தன் புகாரில் ஆதாரத்தோடு தெரிவித்துள்ளது இந்த வங்கி.
ஆனால் இந்தப் புகாரில் எந்த புரோக்கர் பெயரையும் ஐசிஐசிஐ வங்கி குறிப்பிடவில்லை. இருந்தாலும் இதுகுறித்து மும்பை போலீசும், சைபர் கிரைம் பிரிவும் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் என்றும் மும்பை கூடுதல் கமிஷனர் சஞ்சய் சக்சேனா நிருபர்களிடம் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications