வழிப்பறி திருடர்களை மடக்கிய மாணவி!
சென்னை: சென்னை அருகே செயினை பறிக்க வந்த திருடர்கள் இருவரை கல்லூரி மாணவி பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தார்.
சென்னை அடுத்த தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரி மாணவி புஷ்பா (21). தாம்பரம் பகுதியைச் சேர்ந்த இவர், நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். வீடு நோக்கி நடந்து கொண்டிருந்த புஷ்பாவிடம் இருந்து பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் தங்க செயினை பறிக்க முயன்றனர்.
உடனே சுதாரித்துக் கொண்ட புஷ்பா, அவர்களின் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டார். இதனால் அவர்களால் பைக்கை ஓட்ட முடியாமல் தடுமாறி கீழே விழுந்தனர்.
அடுத்த நொடியே தனது துப்பட்டாவால் வாலிபர்கள் இருவரின் கைகளையும் புஷ்பா கட்டினார். அவர்களை துப்பட்டாவில் இழுத்து பிடித்தபடி உதவி கேட்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் திருட்டு வாலிபர்கள் இருவரையும் பிடித்து உதைத்தனர்.
பின்னர் அவர்கள் உதவியோடு இருவரையும் போலீஸில் ஒப்படைத்தார் புஷ்பா.
விசாரணையில் அவர்கள் பெயர் பார்த்தசாரதி (21), வெங்கடேசன் (27) எனத் தெரியவந்தது. இரண்டு முறை வழிப்பறி குற்றங்களை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications