'அதிமுக 37': ராசிபுரத்தில் எம்ஜிஆர் சிலை திறக்கும் ஜெ
சென்னை: அதிமுகவின் 37வது ஆண்டு விழாவை முன்னிட்டு ராசிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆரின் சிலையை அக்கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து அக்கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கி 36 ஆண்டுகள் நிறைவடைகிறது. வரும் 17ம் தேதி 37வது ஆண்டு தொடங்குவதை கொண்டாடும் வகையில் அன்றைய தினம், கட்சி பொது செயலாளர் ஜெயலலிதா நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திற்கு சென்று, அங்கு நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆரின் சிலையை திறந்து வைக்கிறார்.
பின்னர் கட்சி கொடியை ஏற்றி வைத்து, விழா சிறப்பு மலரை வெளியிடுகிறார். அதைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அதே போல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமைக் கழகத்தில் 17ம் தேதி காலை 10 மணிக்கு, அவைத் தலைவர் மதுசூதனன், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications