இலங்கை தமிழர்களுக்காக ராஜினாமா-காங் ஆதரவு
சென்னை: இலங்கை விவகாரத்தில் 2 வாரத்துக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என்ற அனைத்து கட்சி தீர்மானத்தை நாங்களும் ஆதரிக்கிறோம் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இலங்கை தமிழர்கள் நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கிறோம். அதற்காகத்தான் இந்த முக்கிய தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அங்கமாக நாங்களும், முதல்வர் கருணாநிதியும் இருக்கிறோம். இந்த விஷயத்தில் எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கிறோம்.
முதல்கட்டமாக, 2 வாரத்துக்குள் முடிவை சொல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி நாங்கள் முடிவு செய்வோம் என்றார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், இந்த கூட்டத்தின் முடிவில் தீர்மானம் கொண்டு வருவதை விட வரைவு தீர்மானத்தை முதலில் சொல்லிவிட்டால் அதை வைத்து விவாதிக்கலாம் என்ற எங்கள் கோரிக்கையை ஏற்று வரைவு தீர்மானத்தை முதல்வர் கருணாநிதி முதலிலேயே வாசித்தார்.
அதன்பிறகு விவாதம் நடத்தப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முன்பு சட்டமன்றத்திலும், இதுபோன்ற கூட்டங்களிலும் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் போல் இது இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினோம். தீர்மானத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறுகையில், இலங்கையில் தமிழகர்கள் மீதான ராணுவ தாக்குதலை நிறுத்த வேண்டும், இலங்கை அரசுக்கு வழங்கும் ஆயுத உதவியை இந்தியா நிறுத்த வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அரசு உதவ வேண்டும், ரெட்கிராஸ் போன்ற தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அங்கு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தினோம். அனைத்துக் கட்சித் தீர்மானத்தை ஆதரிக்கிறோம் என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறுகையில், முன் எப்போதும் இல்லாத பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் கூட்டம் நடந்தது. இங்கு வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications