உத்தபுரத்தில் மார்க்சிஸ்ட் எம்எல்ஏக்கள் விசாரணை
மதுரை: உத்தப்புரத்தில் காவல் துறையால் பாதிக்கப்பட்ட தலித் மக்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் நேரில் விசாரணை நடத்தினர்.
மதுரை மாவட்டம உத்தபுரத்தில் தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு இரு சமூகத்தினருக்கு இடையே தொடர் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சிபிஎம் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பாலபாரதி தலைமையில் எம்எல்ஏக்கள் நன்மாறன், லதா, ஜான் ஜோசப் அடங்கியோர் கொண்ட குழு உத்தப்புரத்திற்கு சென்றது.
உத்தப்புரத்தில் காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படும் தலித் மக்களையும், சேதமடைந்த வீடுகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.
பின்னர் பாலபாரதி, நன்மாறன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
உத்தப்புரம் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதியை அகற்றிய தமிழக முதல்வரின் நடவடிக்கை பாராட்டக் கூடியது. இந்த ஊரில் தலித் மக்கள் சாதி கொடுமையால் பரிதவித்து வருகின்றனர்.
இங்கு 75க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குழந்தை பிறந்து மூன்று நாட்களே ஆன பெண்ணை கைக் குழந்தையுடன் இழுத்துச் சென்று காவல் துறை வண்டியில் ஏற்றியுள்ள சம்பவம் வன்மையாக கண்டிக்கதக்கது.
காவல் துறையின் தாக்குதலில் அப்பாவி பெண்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலித் மக்கள் மீது நடைபெற்ற இந்த தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனே நிவாரணம் வழங்க வேண்டும்.
ஆனால் மதுரை மாவட்ட ஆட்சியர் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை வந்து பார்க்கவும் இல்லை. அவர்களுக்கு நீதி வழங்க போதிய அக்கரையும் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறினர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications