வேலூர் அருகே தீண்டாமை வேலி-அதிகாரிகள் அகற்றம்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள பில்லாந்திபட்டு கிராமத்தில் அமைக்கப்பட்ட தீண்டாமை வேலி அகற்றப்பட்டது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே பில்லாந்திபட்டு கிராமம் உள்ளது. இங்கு இரண்டு சமூக மக்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு சமூகத்தினர் தீண்டாமை வேலியை அமைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சமூக ஆர்வலர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பில்லாந்திபட்டு கிராமத்துக்கு நேரடியாக சென்று மக்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர், தீண்டாமை வேலியை அரசே முன் வந்து அகற்ற வேண்டும் என்று கூறி மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டனர். அரசு அகற்றவில்லையெனில், வரும் 22ம் தேதி தீண்டாமை வேலியை நாங்களே அகற்றுவோம் என்றும் கூறியிருந்தனர்.
இதையடுத்து, இப்பிரச்சனையை தீர்க்கும் வகையில் வேலூர் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் கூட்டத்தில் இரும்பு வேலியை அகற்றுவது என முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி அதிகாரிகள் முன்னிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பில்லாந்திபட்டு கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த முள் வேலி அகற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications