தீபாவளி பண்டிகை-1000 சிறப்பு பஸ்கள்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் ரயில் மற்றும் பஸ்களில் முன் பதிவு செய்ய கடைசி நேர நெரிசலில் தவித்து வருகிறார்கள். அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்துவிட்டது.
தூத்துக்குடி, மதுரை, திருச்சி, நாகர்கோவில், கோவை, திருவனந்தபுரம் உள்பட பல பகுதிகளுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களிலும் முன் பதிவு முடிந்துவிட்டது.
தனியார் ஆம்னி பஸ்களிலும் முன் பதிவு முடிந்து இடமில்லாத நிலை நிலவுகிறது. தீபாவளிக்கு முன்னதாக 24, 25, 26, ஆகிய தேதிகளில் எல்லா ஆம்னி பஸ்களிலும் டிக்கெட்டுகள் விற்றுவிட்டன.
இந் நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் மூலம் 1,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் சட்டநாதன் கூறுகையில்,
மக்கள் வசதிக்காக சென்னை கோயம்பேட்டில் இருந்து 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மற்ற போக்குவரத்து கழகங்களிடம் இருந்து பஸ்கள் பெறப்பட்டு நீண்ட தூர பகுதிகளுக்கு இயக்கப்படும்.
சென்னையிலிருந்து நெல்லை, நாகர்கோவில், மதுரை, திருச்சி, தூத்துக்குடி, தஞ்சாவூர் கும்பகோணம் போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன் பதிவு நடந்து வருகிறது. சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு பஸ்கள் 24ம் தேதி முதல் இயக்கப்படும் என்றார்.
அதே போல பிற ஊர்களில் இருந்தும் 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications