தமிழகம் முழுவதும் 2100 தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து!
சென்னை: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி தமிழ் திரையுலகம் சார்பில் ராமேஸ்வரத்தில் 19ம் தேதி பேரணி நடக்கிறது.
இப்பேரணியையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் 19ம் தேதி காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.
இலங்கை தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை சிங்கள அரசு உடனடியாக நிறுத்த வேண்டும், இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவிகள் வழங்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ம் தேதி ராமேஸ்வரத்தில் தமிழ் திரையுலகினர் திரண்டு பேரணி, பொதுக் கூட்டம் நடத்துகின்றனர்.
இதில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள், பெப்சி தொழிலாளர்கள் என திரையுலகைச் சேர்ந்த அனைத்து பிரிவினரும் கலந்து கொள்கின்றனர்.
இதையொட்டி 18, 19, 20 ஆகிய 3 நாட்கள் திரையுலகம் சம்பந்தமான அனைத்து பணிகளும் ரத்து செய்யப்படுகிறது. போராட்டம் நடக்கும் 19ம் தேதி தியேட்டர்களும் மூடப்படும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
19ம் தேதி பேரணியில் திரை அரங்கு உரிமையாளர்கள், தொழிலாளர்களும் கலந்து கொள்கின்றனர். அதையட்டி அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,100 தியேட்டர்களில் காலை, மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications