போர் நிறுத்தம் இல்லை-ராஜபக்சே

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: விடுதலை புலிகளுக்கு எதிரான போரை நிறுத்த முடியாது. போர் நிறுத்தம் செய்தால் புலிகள் அதை சாதகமாக்கிக் கொண்டு தற்கொலை படை தாக்குதல் நடத்துவார்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை ராணுவ அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் மீது விடுதலை புலிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசியல் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தத்தை எங்களால் அறிவிக்க முடியாது. இதுகுறித்து நாங்கள் பரிசீலிக்கவில்லை.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டால் புலிகளுக்கு அது சாதகமாகிவிடும். அதிக அளவில் தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்த திட்டமிட அவர்களுக்கு அவகாசம் வழங்கியது போலாகிவிடும்.

கிளிநொச்சி புறநகர் பகுதியை ராணுவம் ஆக்ரமித்துவிட்டது. எந்த சமயத்திலும் அந்த நகரை ராணுவம் கைப்பற்றிவிடும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வன்னப் பகுதியில் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கைககளை தமிழக அரசியல் தலைவர்களால் தடுத்த நிறுத்த முடியாது.

இலங்கை அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிராக தவறான பிரசாரத்தை புலிகள் செய்து வருகின்றனர். எனவே அவர்களின் தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகிவிட வேண்டாம் என்று இந்திய அரசை இலங்கை அரசு கேட்டுக் கொள்கிறது.

இலங்கை இறையாண்மைமிக்க நாடு. இலங்கையில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விருமபுகிறேன்.

வன்னிப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் இலங்கை அரசு வழங்கும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+