காஞ்சி நெசவாளர்களைச் சந்தித்து குறைகேட்டார் விஜயகாந்த்
காஞ்சிபுரம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு திடீரென்று சென்றார். விசைத் தறி நெசவாளர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். விதி முறைகளை மீறி மணல் அள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் நேரில் கேட்டறிந்தார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள அய்யம்பேட்டை கிராமத்திற்கு நேற்று காலை சென்றார். அங்கு வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்களைச் சந்தித்தார். தொடர் மின்வெட்டு காரணமாக விசைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தார்.
தினமும் ஆறரை மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதால் தொழில் செய்ய முடியவில்லை என்றும், இதனால் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் நெசவாளர்கள் விஜயகாந்திடம் கூறினர்.
பின்னர் பாலூர் என்ற கிராமத்திற்குச் சென்று அங்கிருக்கும் மணல் குவாரிகளைச் சென்று பார்த்தார். விதிமுறைகளை மீறி இங்கு மணல் அள்ளப்படுவதாகவும், இதனால் தங்களுக்கு மிகுந்த பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விஜயகாந்திடம் கூறினார்கள்.
இந்த விவரங்களை கேட்டறிந்து கொண்ட விஜயகாந்த், பின்னர் அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் மின்வாரிய அலுவலகம் சென்று பொதுமக்களுக்கு செய்யப்படும் மின் சப்ளை குறித்து கேட்டறிந்தார்.
நாளை சென்னையில் தேமுதிகவின் இளைஞரணி மாநாடு நடக்க உள்ளது. மின் வெட்டு, விலைவாசி, ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து விஜயகாந்த் திமுக அரசையும், மத்திய அரசு குறித்தும் கடுமையாக விமர்சிக்க உள்ளார்.
நெசவை பெரிதும் நம்பியுள்ள காஞ்சிபுர நகரின் நெசவாளர்கள் மின்வெட்டு காரணமாக சந்தித்து வரும் இழப்பு குறித்து இந்த மாநாட்டில் பேச வசதியாக கேப்டன் செய்த 'பீல்ட் ஒர்க்' இது என்கிறார்கள் அவரது கட்சிக்காரர்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications