இலங்கை தூதரை அழைத்து இந்தியா கண்டனம்
டெல்லி: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீதான சிங்கள ராணுவத் தாக்குதல் நடத்துவதை உடனே நிறுத்த வேண்டும் என இலங்கைத் தூதர் சி.ஆர். ஜெயசிங்காவை நேரில் அழைத்து இந்தியா மீண்டும் எச்சரித்துள்ளது.
இந்த விவகாரத்தில் சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இலங்கை துணைத் தூதர் பலித கொணகுடாவை நேரில் அழைத்து இந்தியாவின் கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் டெல்லியில் உள்ள இலங்கை தூதர் சி.ஆர்.ஜெயசிங்கேயை நேற்று நேரில் அழைத்துப் பேசினார்.
அப்போது இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளை இலங்கை அரசு மதித்து நடக்க வேண்டும், தாக்குதல்களில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இனப் பிரச்சினைக்கு ராணுவரீதியில் தீர்வு காண முயற்சிக்காமல், பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும்,
இரு நாடுகளுக்கும் பொதுவான கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் தாக்கப்படுவதையும், கொல்லப்படுவதையும் இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இலங்கை அமைச்சருடன் இந்திய தூதர் பேச்சு:
அதே போல இலங்கைக்கான இந்தியத் தூதரும் அந் நாட்டு வெளியுறவு அமைச்சரை நேரில் சந்தித்து தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications