மோசடி- போலி பெண் சாமியார் கைது
தஞ்சாவூர்: தஞ்சையில் ஓய்வு பெற்ற அதிகாரியின் மனைவிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்த போலி பெண் சாமியார் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள மெலட்டூரைச் சேர்ந்தவர் பத்மனாபன் (64). இவர் நாகை வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் ஆர்டிஓவின் நேர்முக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி பத்மாவதி (55). இவர்களது மகன்கள் மங்கள குமார், ராஜராஜன், கீர்த்தி வாசன். மூன்று பேருமே மன வளர்ச்சி குன்றியவர்கள்.
மருத்துவ சிகிச்சைகள் அளித்தும் நலம் பெற வில்லை. இதனால் பத்மாவதி கோயில்களுக்கு சென்று பிராத்தனை செய்து வழிபட்டார்.
இந்த நிலையில் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் சாமியாருடன் பத்மாவதிக்கு அறிமுகம் கிடைத்தது.
அப்போது, உன் குடும்பத்திற்கு செய்வினை உள்ளது. அதை தீர்த்தால் அந்த நோய் குணமாகிவிடும் என்று பெண் சாமியார் பத்மாவதியிடம் கூறினார்.
அதை நம்பிய பத்மாவதி அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பூஜைகள் நடத்தியுள்ளார். இதை சாக்காக வைத்து அவரிடம் இருந்து போலி பெண் சாமியார் மகேஸ்வரி பல லட்சம் ரூபாய் பறித்துள்ளார். மேலும் 25 பவுன் நகைகளையும் வாங்கியுள்ளார்.
மேலும் பூஜைகள் நடத்த பத்மாவதியிடம் ரூ.6 லட்சம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க வேண்டாம் என்று பத்மாவதியின் மகள் சியாமளாவின் கணவர் தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகேஸ்வரி, அவரின் அண்ணன் சங்கரை கடத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இது பற்றி பத்மனாபன் தஞ்சை எஸ்பி சம்பத்குமாரிடம் நேரில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் போலி பெண் சாமியார் மகேஸ்வரியை கைது செய்து அவரிடம் இருந்து சங்கரை மீட்டனர்.
மேலும் அவரிடம் இருந்த டாடா சுமோ கார், அம்பாசிடர் கார், 3 பவுன் நெக்லஸ், பல ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications