முதல்வருக்கு மிரட்டல்-மந்த கதியில் விசாரணை!
கரூர்: தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தொலைபேசியில் வந்த கொலை மிரட்டல் தொடர்பாக தனிப்படை போலீசார் கரூரில் விசாரணை மந்த கதியில் நடந்து வருகிறது.
சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய மர்ம நபர் ஒருவர், ஈழத் தமிழர்கள் இந்தியாவில் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவத் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும், இல்லை என்றால் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்படுவார்கள் என்று போனில் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக முதல்வர் அலுவலகத்துக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரைப் பிடிப்பதற்காக மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் கரூரில் உள்ள பொது தொலை பேசியில் இருந்து மர்ம நபர் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் கரூருக்கு சென்றனர்.
மர்ம நபர் பேசியதாக கூறப்படும் தனியார் நிறுவன பொது தொலைபேசி நிலையத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இருந்த போதிலும் அந்த மர்ம நபரை கண்டுபிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications