புதுக்கோட்டையில் கஞ்சா விற்கும் பெண்கள்!
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டையி்ல் பஸ் நிலையம், சந்தை பகுதி, அரசு மருத்துவமனை, அரசு கல்லூரி அருகே சில பெண்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது.
புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதிகளில் தொடர்ந்து ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விற்பனைக்காக கஞ்சா பொட்டலம் வைத்திருந்த மாப்பிள்ளையார் குளத்தை சேர்ந்த சரவணன் மனைவி ஆனந்தி(23)யை போலீசார் கைது செய்தனர்.
அதே போன்று ஆவுடையார் கோவில் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த ரெங்கயானை(54) என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனையில் பெண்கள் ஈடுபட்டிருப்பது போலீசாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications