காஞ்சிபுரம் அருகே இடிதாக்கி விவசாயி பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார் சத்திரம் அருகே வயலில் மாடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி இடிதாக்கி இறந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (35), விவசாய கூலி. நேற்று மதியம் வயலில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மழை அடித்து பெய்தது.
அப்போது ஏற்பட்ட இடிதாக்கி முனுசாமி வயல் வெளியிலேயே உடல் கருகி இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications