மணிப்பூர் முதல்வர் வீடு அருகே குண்டு வெடிப்பு
இம்பால்: மணிப்பூர் முதல்வர் ஓக்ராம் இபோபி சிங் வீடு அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
நேற்றிரவு 8.30 மணியளவில் மணிப்பூர் முதல்வர் ஓக்ராம் வீடு அருகே உள்ள சாலை சந்திப்பில் பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இது சீன கையெறி குண்டு என்று சந்தேகிக்கிறோம். தாக்குலுக்கு வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நகர் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து விடுவோம். முதல்வரை கொல்வதற்கான சதியாக இருக்கலாம். கடந்த செப்டம்பர் முதல் தேதி இரவு முதல்வர் வீடு மீது குண்டு வீசப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் இது இரண்டாவது தாக்கதல் என்று தெரிவித்தனர்.
வடகிழக்கு பகுதிகளுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் அவர் உள்ளார். ஏற்கனவே அவருக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. தற்போது இபோபி சிங் வீட்டுக்கு அருகில் தாக்குதல் நடந்ததை அடுத்தது பிரதீபாவுக்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications