நாளை காலை விண்ணில் பாய்கிறது சந்த்ராயன்

Subscribe to Oneindia Tamil

Chandrayaan-1
ஸ்ரீஹரிகோட்டா: நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவி்ன் முதல் விண்கலமான சந்த்ராயன்-1 நாளை (புதன்கிழமை) காலை 6.20 மணிக்கு பிஎஸ்எல்வி சி-2 ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.

சென்னையிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளித் தளத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்படுகிறது.

நேற்று காலை முதல் இந்த விண்வெளித் தளம் அமைந்துள்ள வங்காள விரிகுடா கடல் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆனாலும் கவுண்ட்-டவுன் திட்டமிட்டபடி நடந்து கொண்டுள்ளது.

வானிலையில் பெரிய அளவில் திடீர் மாற்றம் ஏதும் இல்லாவிட்டால், தொடர்ந்து மழை பெய்தாலும் ராக்கெட் ஏவப்படும் எனத் தெரிகிறது.

ஏவப்பட்ட 1,102வது வினாடியில் பிஎஸ்எல்வி ராக்கெட்டிலிருந்து சந்த்ராயன் விண்கலம் பிரிந்து செல்லும்.

இத் திட்டத்துக்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமாந இஸ்ரோ ரூ. 386 கோடி செலவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+